17 ஆண்டு திரைப்பயணம்… மன உறுதியை கற்றுக்கொடுத்தது – ஸ்ருதி ஹாசன்!

நடிகையாக 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஸ்ருதி ஹாசன், தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “இந்தப் பயணம் எனக்கு என்னைப் பற்றியும், என் தொழிலைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் பல விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது. ஒரு படைப்பின் வெற்றி, தோல்வியைத் தாண்டி, அதை உருவாக்க ஒரு பெரிய குழுவின் கூட்டுமுயற்சியே முக்கியம் என்பதை உணர்ந்தேன். கடந்த 17 ஆண்டுகளில் திரையுலகம் என்னை வலிமையானவளாகவும், மன உறுதியானவளாகவும் மாற்றியுள்ளது. எந்த விமர்சனத்தையும், சவாலையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அது எனக்குக் கொடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading