இந்தியாவில் முன்பதிவில் அசத்தும் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’!

கடந்த 2021-ம் ஆண்டு ஜான் வாட்ஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ திரைப்படம் உலகளவில் 1.921 பில்லியன் டாலர் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ நாளை வெளியாக உள்ளது. இந்தியாவில் இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், டிக்கெட் முன்பதிவின் மூலம் மட்டும் இதுவரை ரூ.35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ‘நோ வே ஹோம்’ படத்தை விட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து, புதிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading