இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா, தற்போது தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக குத்துப்பாடல்களில் அவரது நடனங்கள் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், சமீபத்தில் அவர் பேசிய கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழில் சுந்தர்.சி இயக்கி வரும் ‘புருஷன்’ திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துவருகிறார். இதனுடன், இந்தி திரையுலகிலும் ஐந்து புதிய படங்களில் நடித்து வருவதால், அவரது கால்ஷீட் முழுவதும் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா, ரசிகர்களின் அன்பே ஒரு நடிகரின் மிகப்பெரிய பலம் என்று குறிப்பிட்டார். அவர்களை மகிழ்விப்பதையே தனது முக்கிய பொறுப்பாக கருதுவதாகவும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நடிகைகளை ஆதரிக்க வேண்டும் தவிர தேவையற்ற விமர்சனங்களுக்கு ஆளாக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.மேலும், சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் மற்றும் திருத்தப்பட்ட புகைப்படங்களை பரப்பி மகிழும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகோள் விடுத்தார். அவரது இந்த கருத்துகள் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
