முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் ஜெய்…!

நடிகர் ஜெய் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சமீபத்தில் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அந்தச் சந்திப்பின் போது நினைவுப் பரிசாக ஒரு செடியையும் அவர் வழங்கினார்.இந்த சந்திப்புக்குப் பிறகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஜெய், “நல்ல விஷயங்கள் நடக்க நேரம் எடுக்கும்… சிறந்த விஷயங்கள் தங்களின் நேரத்தைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்…” என்று குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவு ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய், “எனது அண்ணாவை சந்தித்தது மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. அவருடன் செலவிட்ட நேரம் மறக்க முடியாதது. தமிழ்நாட்டு மக்களுக்காக தொடர்ந்து உழைக்க அவருக்கு நல்ல உடல்நலம், பலம் மற்றும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.

2002-ஆம் ஆண்டு வெளியான ‘பகவதி’ திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெய், பின்னர் ‘சென்னை 600028’, ‘சுப்ரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட பல படங்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘சட்டென்று மாறுது வானிலை’ நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘டெஸ்லா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading