லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டிசி’ படத்தின் ஆல்பம் வெளியீடு!

நடிகராக லோகேஷ் கனகராஜை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘டிசி’ திரைப்படம் தொடர்பாக அடுத்தடுத்த முக்கிய அப்டேட்கள் வெளியாகியுள்ளன. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம், லோகேஷின் நடிப்பு பயணத்தில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் , ‘டிசி’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் வன்முறை அம்சங்கள் நிறைந்த அதிரடி திரைப்படமாக இது உருவாகியிருப்பது உறுதியாகியுள்ளது. ஆக்‌ஷன் ரசிகர்களை குறிவைத்து உருவான இந்தப் படம் பெரிய திரையில் விறுவிறுப்பான அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முதலில் ஜூலை 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் வெளியீட்டு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தற்போது ஆகஸ்ட் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.

இசை வெளியீட்டிலும் ‘டிசி’ தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. சமீபத்தில் வெளியான ‘பூம் பா டிகா டிகா’ பாடலை அனிருத் மற்றும் வேடன் இணைந்து பாடியுள்ள நிலையில், அதன் வரிகளை ஹெய்ஸன்பர்க் மற்றும் வேடன் எழுதியுள்ளனர். இதற்கு முன் வெளியான ‘ராகா ஆப் ரிவெஞ்’, ‘ஹேங் ஓவர்’ பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, படத்தின் 15 பாடல்களும் முழு ஆல்பமாக அனிருத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக அமைந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading