வித்தியாசமான ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ட்ரோன்ஸ்’ திரைப்படம்!

கனவுகளில் தோன்றும் விசித்திரமான நிகழ்வுகள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் என்னவாகும் என்ற சுவாரஸ்யமான கற்பனையை மையமாக வைத்து உருவாகி வருகிறது ‘ட்ரோன்ஸ்’ திரைப்படம். ஜிஎம் மோர்கன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்குகிறார். சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி, ஹாரர் என வித்தியாசமான அம்சங்களுடன் உருவாகி வரும் இப்படம், தனித்துவமான கதை களத்தால் கவனம் பெற்றுள்ளது. இதில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, ‘பரிதாபங்கள்’ புகழ் டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஆர்ஜே தீபக் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. வழக்கமான கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, விநோதமான கற்பனை உலகத்துக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் அந்த போஸ்டர்கள் அமைந்துள்ளன. ஹாரர் மற்றும் ஃபேண்டஸி கலவையிலான இந்த அணுகுமுறை படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. தொழில்நுட்பக் குழுவில் ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, எஸ்.ஆர். ஹரி இசையமைக்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்புப் பணிகளை கவனித்து வருகிறார்.

இப்படத்தின் முழு உரிமையையும் தயாரிப்பாளர் செந்தில் கைப்பற்றியுள்ளார். ஃபைவ் ஸ்டார் நிறுவனம் மூலம் இந்தியா முழுவதும் பல மொழிகளில் திரைப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் சூழலில், படத்தின் இசையும் டிரெய்லரும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading