‘மொத ராத்திரி’ படத்தைப் பாராட்டிய தனுஷ் – படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்து!

புதிய இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கிய ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.வெங்கடேஷ், பானுப்பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படம் வெளியானது முதல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திருமணத்திற்கு விருப்பமில்லாத இருவர் எதிர்பாராதவிதமாக திருமண பந்தத்தில் இணைகின்றனர். அவர்களின் திருமண நாளில் இரவு நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டே ‘மொத ராத்திரி’ படத்தின் கதை நகர்கிறது. புதுமுகக் குழுவின் இந்த முயற்சி தற்போது கவனம் பெற்று வருகிறது.இப்படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ், இயக்குநர் ராஜா கருப்பசாமியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதையடுத்து படத்தைப் பற்றிய தனது கருத்தையும் சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

“மொத ராத்திரி மனதிற்கு இதமான திரைப்படமாக உள்ளது. முதன்முறையாக இணைந்து பணியாற்றிய ஒரு குழுவின் இந்த சிறப்பான முயற்சி பாராட்டுக்குரியது. குடும்பத்தினருடன் திரையரங்கில் சென்று இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்” என தனுஷ் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading