சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த பலர் ஆந்திரப் பிரதேசத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். சிரஞ்சீவியின் மனைவி சுரேகா தேவஸ்தானக் குழுவில் உறுப்பினராகவும், அவரது சகோதரர் பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேச துணை முதல்வராகவும் உள்ளனர். மற்றொரு சகோதரரான நாகபாபு சட்ட மேலவை உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில், சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதாவும் விஜயவாடா துர்கம்மா தேவஸ்தான அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சிரஞ்சீவி குடும்பத்தின் பொதுவாழ்வு பங்களிப்பு மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
Add a Comment
