வில்லன் இல்லாத ‘ஹாய்’ திரைப்படம்? இயக்குனர் விஷ்ணு எடவன் கொடுத்த அப்டேட்!

நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘ஹாய்’ தற்போது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தில் பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், எஸ்.எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி.ஜே மற்றும் கே.எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘ஹாய்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதுகுறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் கூறுகையில், “குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள எளிமையான மற்றும் இனிமையான பொழுதுபோக்கு திரைப்படம் இது. சென்னை, கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளை பின்னணியாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வில்லன் இல்லாத மகிழ்ச்சியான கதைக்களம் கொண்ட படமாக இது இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading