தெலுங்கில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “இருமுடி”. தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்டு ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் சிவா நிர்வானா இயக்கியுள்ளார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் டப்பிங் பணிகளை ரவி தேஜா தொடங்கியுள்ளார். இதில் குழந்தை நட்சத்திரமான பேபி நட்சத்திராவும் டப்பிங் பணிகளில் கலந்து கொண்டுள்ளார். இருவரும் டப்பிங் ஸ்டுடியோவில் இணைந்து பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
—
