விமல் தயாரித்து நடித்த “மன்னர் வகையறா” படம் 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இந்த படத்தை தயாரிக்க கோபி என்பவரிடம் விமல் 4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். இந்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் காசோலை வழங்கி உள்ளார். அந்த காசோலை வங்கியில் பணம் இன்றி திரும்பி வந்தது. அதன் பின்னரும் விமல் கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் கோபி செக்மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், நடிகர் விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் மேல்முறையீடு செய்ய நடிகர் விமலுக்கு கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் அவர் மேல்முறையீடு செய்துள்ளதால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Add a Comment
