டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நீட் வினாத்தாள் கசிவு, கல்வி சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் ஆதரவு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், ’96’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை கௌரி கிஷன் நேரடியாக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். போராட்டத்தில் பங்கேற்ற புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Add a Comment
