பிரபல இளம் ஹாலிவுட் நடிகை கெய்லி ஹாட்டில் காலமானார்!

‘காட்சில்லா வெர்சஸ் காங்’ திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்ற இளம் அமெரிக்க நடிகை கெய்லி ஹாட்டில் (18), அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 2021-ம் ஆண்டு வெளியான ‘காட்சில்லா வெர்சஸ் காங்’ மற்றும் 2024-ம் ஆண்டு வெளியான ‘காட்சில்லா எக்ஸ் காங்: தி நியூ எம்பயர்’ திரைப்படங்களில் ‘ஜியா’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கெய்லி ஹாட்டில் உலகளவில் பிரபலமானார். குறிப்பாக காங் உடனான அவரது உணர்வுப்பூர்வமான நடிப்பு ரசிகர்களின் மனதை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading