விருதுகளுக்காக ஏங்குபவர் அல்ல தனுஷ்… விமர்சனங்களுக்கு பதிலளித்த இயக்குனர் கஸ்தூரி ராஜா!

2024-ஆம் ஆண்டுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டபோது, நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தனுஷுக்கு வழங்கப்பட்ட இந்த விருதின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவின.

இந்த விமர்சனங்கள் குறித்து தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். தனுஷுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். அவர் எடுத்த பாதையும், தொடர்ந்து செய்து வரும் முயற்சிகளும் இந்த அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளன. இதில் அரசியல் காரணம் எதுவும் இல்லை. தேசிய விருதுகளை தேர்வுக் குழுவின் முடிவின் அடிப்படையில்தான் வழங்குகிறார்கள். இந்த முறை என் மகனுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் தனுஷை விட பெரிய நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் சென்று அதிகாரத்தை பயன்படுத்தி தேசிய விருது வாங்கவில்லை. இந்த விருது முழுக்க முழுக்க தேர்வுக் குழுவின் முடிவு. யாரையாவது சந்தித்து தனக்கு விருது வாங்கிக் கொடுங்கள் என்று சொல்லும் குணம் தனுஷுக்கு கிடையாது என்று விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இதற்கு முன்பும் ‘ஆடுகளம்’, ‘அசுரன்’ ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளை பெற்றுள்ளார். விருதுக்காக ஓடுபவர் அவர் அல்ல. தனுஷ் அழைத்தால் அவரது படத்தில் நான் நடிப்பேன். ஆனால் செல்வராகவன் அழைத்தால் நடிக்க மாட்டேன். அவருடன் சேர்ந்து வேலை செய்வது சற்று கடினம். அரசியலுக்கு வருவது, கட்சி தொடங்குவது எல்லாம் தனுஷின் விருப்பம். அதைப்பற்றி நாங்கள் எந்த கருத்தும் சொல்லப் போவதில்லை,” என்றார். இதற்கிடையில், தனுஷின் புகைப்படத்துடன் ரசிகர் மன்றக் கொடி ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தக் கொடியில் இடம்பெற்றிருந்த “எண்ணம்போல் தான் வாழ்க்கை” என்ற வாசகத்தை வைத்து, தனுஷ் புதிய ரசிகர் மன்றக் கொடியை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும், அது அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டம் என்றும் பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading