‘அரசன்’ படத்திற்காக உடல் எடையைக் குறைக்க துபாயில் தீவிர உடற்பயிற்சி‌ செய்யும் சிம்பு!

நடிகர் சிலம்பரசன் – இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம், வடசென்னையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி வருகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பல்வேறு கட்டங்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், விக்ராந்த், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வலுவான நடிகர்கள் இணைந்திருப்பதால், படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க இன்னும் சுமார் 60 நாட்கள் மட்டுமே உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு முன்பாக சிறிய இடைவெளி அளிக்கப்பட்டுள்ளதால், நடிகர் சிலம்பரசன் துபாக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டத்தில் வித்தியாசமான தோற்றத்தில் திரையில் தோன்ற வேண்டியிருப்பதால், சுமார் 5 கிலோ உடல் எடையை குறைக்கும் பயிற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் திரையுலக வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading