தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் திரையுலகில் இருந்து விலகியிருந்தார். பின்னர் சிகிச்சைக்கு பிறகு முழுமையாக குணமடைந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில், இயக்குநர் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, நடிப்புடன் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்தும் தயாரித்தும் வெளியான ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி வெற்றி பெற்றது.
சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சமந்தா, குழந்தை பிறக்கும் வரை திரைப்படங்களில் இருந்து சில மாதங்கள் ஓய்வு எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், ரசிகர்களை முழுமையாக விட்டு விலகாமல், புதிய வடிவத்தில் அவர்களை சந்திக்க தயாராகியுள்ளார்.அதன்படி, விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சி ஒன்றை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது இந்த புதிய முயற்சி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகையாக மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும் சமந்தா புதிய பயணத்தை தொடங்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
