சூர்யாவின் ‘SURIYA 49’ படத்தை இயக்குகிறாரா ஹெச் வினோத்?

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு முன்பாக கடந்த மே மாதம் வெளியான ‘கருப்பு’ திரைப்படமும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது அவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தந்தது. இதன் மூலம் ஒரே ஆண்டில் சூர்யா நடித்த இரண்டு படங்களும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் என்ற மைல்கல்லை கடந்துள்ளன.

சில ஆண்டுகளாக சூர்யாவின் படங்கள் எதிர்பார்த்த அளவிலான வெற்றியைப் பெறாத நிலையில், தற்போது அடுத்தடுத்து கிடைத்துள்ள இந்த வெற்றிகள் அவரது மார்க்கெட்டை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது. மேலும் குறிப்பாக, இந்த தீபாவளிக்கு வெளியாகவுள்ள சூர்யாவின் 47-வது படம் வெற்றி பெற்றால், ஒரே ஆண்டில் தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்த ஹாட்ரிக் சாதனையை அவர் பதிவு செய்வார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதற்கிடையே, சூர்யாவின் 48-வது படத்தை ‘வேட்டையன்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்தப் படத்தில் சூர்யா மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சூர்யா 49 படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கவுள்ளதாகவும், சூர்யாவுக்கு ஜோடியாக வாமிகா கபி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading