புதுமுகங்களின் நடிப்பில் செப்டம்பர் 18-ல் திரைக்கு வரும் ‘கோல்ட் கால்’!

புதுமுக நடிகர்கள் பலர் இணைந்து நடித்துள்ள ‘கோல்ட் கால்’ திரைப்படம், செப்டம்பர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை இயக்குநர் தம்பிதுரை இயக்கியிருக்கிறார். சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ், கிருஷ்ணா விஜய் சந்திரன், வி. ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர் உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, கீர்த்தனா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.

ஜி.என். சரவணன் ஒளிப்பதிவு செய்ய, பிரணவ் கிரிதரன் இசையமைத்துள்ளார். சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பு பணிகளை கவனித்திருக்கிறார். வாக் த்ரோ என்டர்டெயின்மென்ட் சார்பில் கேசவ மூர்த்தி தயாரித்துள்ள இந்தப் படத்தை, ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார். முழுக்க ஒரு ஃபீல் குட் அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

‘கோல்ட் கால்’ படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் தம்பிதுரை கூறுகையில், நம்மைச் சுற்றி இருக்கும் விற்பனைப் பிரதிநிதிகளின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை மையமாக வைத்தே திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, நான்கு நண்பர்களாக இருக்கும் விற்பனைப் பிரதிநிதிகளின் வாழ்க்கையில் நடக்கும் காதல், மோதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாக வைத்து இரண்டு மணி நேரத்திற்குள் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக கொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஏற்கெனவே வெளியான படத்தின் டீசர் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 18-ம் தேதி முதல் ‘கோல்ட் கால்’ படத்தை உலகம் முழுவதும் திரையரங்குகளில் பார்க்கலாம். இதனையொட்டி வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading