72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு… விருதுகளை குவித்த ‘அமரன்’ முதல் ராயன் வரை…! முழு பட்டியல் இதோ!

இந்திய சினிமாவின் உயரிய கவுரவங்களில் ஒன்றான 72வது தேசிய திரைப்பட விருதுகள் (2024) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு பல முக்கிய விருதுகள் கிடைத்துள்ளன. பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படத்திற்கு சிறந்த சவுண்ட் மிக்ஸிங் பிரிவில் சுரன் ஜி தேர்வுக் குழுவின் சிறப்பு விருதைப் பெற்றுள்ளார். மேலும், ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக நடிகர் தனுஷ் தேர்வுக் குழுவின் சிறப்பு சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார். அதேபோல், தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வாகியுள்ளது. சமூக மாற்றத்திற்கான சிறந்த திரைப்படமாகவும் ‘கேப்டன் மில்லர்’ தேர்வாகியுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மொத்தம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த இயக்குநராக ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி. பிரகாஷ், சிறந்த படத்தொகுப்புக்காக ஆர். கலைவாணன் ஆகியோர் தேசிய விருதுகளை வென்றுள்ளனர்.

அதேபோல், ‘மகாராஜா’ திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த ஸ்டன்ட் இயக்குநருக்கான விருதை அனல் அரசு பெற்றுள்ளதுடன், சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை சாச்சனா நமிதாஸ் வென்றுள்ளார்.

முக்கிய விருதுகள்:

சிறந்த படம் – ஆர்டிக்கிள் 370 (ஹிந்தி)

சிறந்த இயக்குநர் – ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)

சிறந்த பொழுதுபோக்கு படம் – கல்கி 2898 ஏடி

சிறந்த குழந்தைகள் படம் – சின்ன கதா காடு (தெலுங்கு)

சிறந்த சமூக மாற்றத்திற்கான படம் – கேப்டன் மில்லர் (தமிழ்)

சிறந்த அறிமுக இயக்குநர் – ரன்தீப் ஹூடா (வீர் சாவர்கர்)

சிறந்த நடிகர் – மம்முட்டி (பிரம்மயுகம்)

சிறந்த நடிகர் – கார்த்திக் ஆர்யன் (சந்து சாம்பியன்)

சிறந்த நடிகை – யாமி கவுதம் (ஆர்டிக்கிள் 370)

சிறந்த துணை நடிகை – சாச்சனா நமிதாஸ் (மகாராஜா)

சிறந்த துணை நடிகர் – சஞ்சய் மிஸ்ரா (பாக்ஷாக்)

சிறந்த ஆக்‌ஷன் – அனல் அரசு (மகாராஜா)

சிறந்த நடனம் – விஜய் கங்குலி (ஸ்ட்ரீ 2)

சிறந்த பாடல் வரிகள் – மனோஜ் மன்தாஷிர் (மைதான்)

சிறந்த பின்னணி இசை – ஜி.வி. பிரகாஷ் (அமரன்)

சிறந்த இசை – சஷ்வத் சஜ்தேவ் (ஆர்டிக்கிள் 370)

சிறந்த ஆடை வடிவமைப்பு – புஷ்பா 2

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – கல்கி 2898 ஏடி

சிறந்த படத்தொகுப்பு – ஆர். கலைவாணன் (அமரன்)

சிறந்த ஒளிப்பதிவு – ஷகனாத் ஜீலால் (பிரம்மயுகம்)

சிறந்த ஒலி அமைப்பு – மானஸ் சவுத்ரி (புல் புல்லையா 3)

சிறந்த பின்னணி பாடகி – வைக்கம் விஜயலட்சுமி

சிறந்த பின்னணி பாடகர் – அபய் ஜோத்புர்கர்

சிறந்த வசனம் – வெங்கி அட்லூரி (லக்கி பாஸ்கர்)

சிறந்த திரைக்கதை – சுகுமார் (புஷ்பா 2)

மொழி வாரியான சிறந்த திரைப்படங்கள்:

தமிழ் – ராயன்

தெலுங்கு – கமிட்டி குர்ரோலு

மலையாளம் – பெமினிச்சி பாத்திமா

ஹிந்தி – ஸ்ரீகாந்த்

கன்னடம் – மித்யா

மராத்தி – முக்கம் போஸ்ட் மும்பிள்வாடி

ஒடியா – லஹரி

மணிப்புரி – சுனிதா

கொங்கனி – மாக் அசூம்

குஜராத்தி – மாறன்

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading