‘மகுடம்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருந்தார் நடிகர் விஷால். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான 99-வது படமான இதில், மூன்று மாறுபட்ட தோற்றங்களில் விஷால் நடித்திருந்தார். துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். எனினும், படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், விஷாலின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ‘கருடன்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார், தனது அடுத்த படத்தில் விஷாலை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு லெஜெண்ட் சரவணனை கதாநாயகனாக வைத்து ‘லீடர்’ என்ற படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். அந்தப் படம் வெளியாகியபோது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான கருத்துகளையே பெற்றது குறிப்பிடத்தக்கது.
