‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்ற பாரி இளவழகன், தற்போது ‘அன்பே டயானா’ திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம், அந்நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பாக உருவாகியுள்ளது.
ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சென்னை பெரம்பூரை மையமாகக் கொண்டு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
இன்று திரையரங்குகளில் வெளியான ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்துள்ளார். பின்னர் படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அவர், திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பகிர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
