2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற நடிகர் ஸ்ரீநாத், தற்போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதையடுத்து, விஜயின் நெருங்கிய நண்பர் என்பதாலேயே அவருக்கு வாய்ப்பும் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் குறித்து நடிகரும் விஜயின் நண்பருமான சஞ்சீவ், சமீபத்திய நேர்காணலில் விளக்கம் அளித்துள்ளார். அதில், நண்பர் என்பதற்காக யாருக்கும் வாய்ப்பு வழங்கும் நபர் விஜய் அல்ல என்றும், ஸ்ரீநாத் தூத்துக்குடி மக்களுக்காக பல்வேறு சேவைகளை செய்ததுடன், அவர் ஒரு மீனவர் என்பதால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையை ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், முதலில் வேறு ஒருவருக்காகவே தொகுதி கேட்டு ஸ்ரீநாத் வந்ததாகவும், பின்னர் அந்த நபர் குறித்து திருப்தி இல்லாததால், ஸ்ரீநாத் தானே போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார். உடனடியாக முடிவு எடுக்காமல், சுமார் ஒரு மாதம் ஆலோசித்த பிறகே விஜய் அவருக்கு வாய்ப்பு வழங்கியதாக சஞ்சீவ் விளக்கமளித்துள்ளார்.நட்பு காரணமாக அல்ல, தகுதி மற்றும் மக்கள் சேவையை கருத்தில் கொண்டே ஸ்ரீநாத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக சஞ்சீவ் தெரிவித்துள்ள இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
