துல்கர் சல்மான் நடித்த ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் அகில் நடிப்பில் வெளியான ‘லெனின்’ திரைப்படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாக்யஸ்ரீ போர்ஸ், சமீபத்திய பேட்டியில் தனது பள்ளிப் பருவ அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தந்தையின் வேலை காரணமாக நைஜீரியாவுக்கு குடிபெயர்ந்தபோது, தனக்கு ஆங்கிலம் தெரியாததால் பள்ளியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள் கேலி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த அனுபவம் தன்னை மனதளவில் பாதித்தாலும், அதையே ஊக்கமாக மாற்றிக்கொண்டு தீவிரமாக ஆங்கிலம் கற்றுக்கொண்டதாக கூறிய பாக்யஸ்ரீ, இன்று சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு அந்த ஆரம்பகால அவமானங்களே காரணம் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
—
