சூர்யா 47 படப்பிடிப்பு நிறைவு… வீடியோவுடன் அறிவித்த படக்குழு!

நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

‘கருப்பு’ படத்தைத் தொடர்ந்து, சூர்யா தற்போது இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் தனது 47-வது திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்காலிகமாக ‘சூர்யா 47’ என அழைக்கப்படும் இப்படத்தில், நஸ்லேன், நஸ்ரியா நசீம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

‘ஆவேஷம்’ வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இந்தப் படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை நகரில் நடைபெற்றது. இந்நிலையில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading