நீலாம்பரி போன்ற வில்லி வேடத்தில் நடிக்க ஆசை… ஐஸ்வர்யா ராஜேஷ் விருப்பம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘ஓ சுகுமாரி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து, சமீபத்திய நேர்காணலில் தனது எதிர்கால திரைப்பயணம் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், “இதுவரை பெரும்பாலும் நேர்மறை கதாபாத்திரங்களில்தான் நடித்துள்ளேன். வலிமையான வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. குறிப்பாக ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி போன்ற எதிர்மறை கதாபாத்திரம் கிடைத்தால் மிகவும் விரும்பி நடிப்பேன். அதேபோல் உளவியல் திரில்லர் படங்களிலும் நடிக்க ஆசையாக இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.

குடும்பக் கதைகளில் அதிகம் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், எதிர்காலத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading