‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன், ‘மாஸ்டர்’, ‘மாறன்’, ‘தங்கலான்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தற்போது ‘சர்தார் 2’ மற்றும் ‘பாக்கெட் நாவல்’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் பகத் பாசிலுடன் இணைந்து சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த அவரது நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது குறித்து பேசிய மாளவிகா மோகனன், எந்த நடிகையும் எல்லை மீறி நடிப்பதில்லை என்றும், சிலர் மட்டுமே தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், கவர்ச்சி என்பது தவறான விஷயம் அல்ல என்றும், அதை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள்தான் தங்களது மனப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
—
