‘ஒரண்ட’ திரைப்படம் மூலம் தமிழுக்கு மீண்டும் வரும் இயக்குனர் சுசி கணேசன்…!

‘பைவ் ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுசி கணேசன், தொடர்ந்து ‘விரும்புகிறேன்’, ‘திருட்டுப்பயலே’, ‘கந்தசாமி’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றார்.

பின்னர் பாலிவுட்டில் கவனம் செலுத்திய அவர், ‘திருட்டுப்பயலே’ மற்றும் ‘திருட்டுப்பயலே 2’ திரைப்படங்களை இந்தியில் ரீமேக் செய்து இயக்கினார். ஆனால் அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், தற்போது மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், சுசி கணேசன் தற்போது ‘ஒரண்ட’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading