‘டிமான்ட்டி காலனி 3’க்கு ‘ஏ’ சான்றிதழ்… செப்டம்பர் 10-ல் திரையரங்குகளில் ரிலீஸ்!

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் ‘ஏ’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ‘டிமான்ட்டி காலனி’ முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது மூன்றாம் பாகமும் வெளியாக தயாராகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் ரூ.50 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம், அதிக தொகைக்கு விற்பனையான முதல் தமிழ் ஹாரர் திரைப்படமாக ‘டிமான்ட்டி காலனி 3’ உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாம் பாகமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading