அக்ஷய் குமார் – சயீப் அலிகான் கூட்டணியில் ‘ஹைவான்’… செப்டம்பர் 11-ல் ரிலீஸ்!

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அக்ஷய் குமார் மற்றும் சயீப் அலிகான் இணைந்து நடித்துள்ள ‘ஹைவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், மோகன்லால் நடித்த மலையாள வெற்றிப் படமான ‘ஒப்பம்’ திரைப்படத்தை தழுவி உருவாகியுள்ளது. இதில் சயாமி கெர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கே.வி.என் புரொடக்சன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதமே படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது வெளியீட்டு தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அக்ஷய் குமார் மற்றும் சயீப் அலிகான் மீண்டும் இணைந்து நடித்துள்ளதால், ‘ஹைவான்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading