‘வாணவேடிக்கை’ மூலம் இணையும் சண்முக பாண்டியன் – திரு… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன், ‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’, ‘படை தலைவன்’, ‘கொம்புசீவி’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் திரு இயக்கும் இந்தப் படத்திற்கு ‘வாணவேடிக்கை’ என பெயரிடப்பட்டுள்ளது. கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சுதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். தயாரிப்பாளர் எல்.கே. சுதீஷ் மற்றும் பூர்ண ஜோதி முதல் காட்சிக்கான கிளாப் அடித்தனர். இயக்குநர்கள் சுசீந்திரன், ஜெயம் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும், சரவணன், இயக்குநர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜெயப்பிரகாஷ், கலை இயக்குநர் கிரண், ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading