தனுஷ் 56-ல் ப்ரீத்தி முகுந்தன் தான் ஹீரோயினா?

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் தனது 56-வது படத்தில் நடிக்க உள்ளார்.

முதலில் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், பிரசாந்த் நீல் – ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் உருவாகும் ‘டிராகன்’ உள்ளிட்ட தெலுங்கு மற்றும் கன்னட படங்களின் கால்ஷீட் பிரச்சினையால், அவரால் கூடுதல் தேதிகளை ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ‘ஸ்டார்’, ‘பிளாஸ்ட்’, ‘இதயம் முரளி’ படங்கள் மூலம் கவனம் பெற்ற நடிகை ப்ரீத்தி முகுந்தன், தற்போது தனுஷ் 56 திரைப்படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பிளாஸ்ட்’ வெற்றிக்குப் பிறகு, மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிப்பதற்காக ப்ரீத்தி முகுந்தன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் 55 திரைப்படம் வெளியான பிறகே, 56-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading