ஹாரர்-பேண்டஸி வகையில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ‘தும்பாட்’ திரைப்படம், சமீபத்தில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகமான ‘தும்பாட் 2’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
முதல் பாகத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த சோஹும் ஷா, இரண்டாம் பாகத்திலும் தனது கதாபாத்திரத்தைத் தொடர்கிறார். அவருடன் இணைந்து பாலிவுட்டின் முன்னணி நடிகரான நவாசுதீன் சித்திகியும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் ‘தும்பாட் 2’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். இயக்குநர் ஆதேஷ் பிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘தும்பாட் 2’ திரைப்படம், அடுத்த ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
—
