சிவராஜ்குமார் நடிக்கும் ‘‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ – வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. ‘கப்ஜா’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் ஆர். சந்துருவுடன் சிவராஜ்குமார் மீண்டும் இணைந்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோகேஷ் இசையமைக்கிறார். அதிரடி அம்சங்களுடன் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே கவனத்தை பெற்றுள்ளது.

ஆர்.சி. ஸ்டுடியோஸ் சார்பில் யமுனா சந்திரா தயாரிக்கும் இப்படத்தை ஆனந்த் பண்டிட் வழங்குகிறார். இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘‘ஒரிஜினல் மான்ஸ்டர்’’ திரைப்படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், அதற்கான மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இதனுடன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர். சந்துரு, ‘கப்ஜா’ திரைப்படத்தை உருவாக்கியபோது இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் ஒரு படத்தை வெளியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதை புரிந்துகொண்டேன். ஆனால் அதற்கு நட்சத்திரங்களின் ஆதரவு முக்கியமானது. அதனால் இந்தப் படத்தின் நடிகர்கள் தேர்விலும் அந்த எண்ணம் பிரதிபலித்துள்ளது. ஒரு கன்னடப் படத்தை மற்ற மொழிகளில் டப்பிங் செய்வதோடு மட்டும் நிறுத்தாமல், அந்தந்த மொழி நடிகர்களை இணைத்து ஒவ்வொரு மாநில ரசிகர்களிடமும் கொண்டு செல்ல விரும்புகிறோம். சிவராஜ்குமாரை மனதில் வைத்தே இந்தக் கதையை எழுதியுள்ளேன். அவர் உலகளவில் அறியப்பட்ட ஹீரோ. தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளைச் சேர்ந்த நடிகர்களும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading