பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், தமிழில் ‘விக்ரம்’, ‘மாமன்னன்’, ‘வேட்டையன்’, ‘மாரீசன்’, ‘இதயம் முரளி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘புஷ்பா’ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். தற்போது ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரிக்கும் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஷஷாங்க் யெலெட்டி இயக்கும் இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரம் சாரா மற்றும் பாலிவுட் நடிகர் சவுரப் சக்தேவா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கால பைரவா இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேஜிக் கலைஞராக வரும் பகத் பாசிலும், குழந்தை சாராவும் மையமாக உருவாகியுள்ள பேன்டசி கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் வெளியானதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
