ரசிகர்களின் அன்புதான் என் மிகப்பெரிய பலம்… மனம் திறந்த திவ்யபாரதி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான திவ்யபாரதி, ரசிகர்களின் அன்பே தனது மிகப்பெரிய பலம் என்றும், அவர்களை தொடர்ந்து மகிழ்விப்பதே தனது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். மாடலிங் துறையின் மூலம் திரையுலகில் அறிமுகமான திவ்யபாரதி, ‘பேச்சுலர்’, ‘கிங்ஸ்டன்’, ‘மதில் மேல் காதல்’, ‘ஆசை’, ‘லிங்கம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழுடன் சேர்த்து தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

திரைப்படங்களைத் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். குறிப்பாக, அவரது நீளமான கூந்தல் மற்றும் ஸ்டைலான தோற்றம் அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து பேசிய திவ்யபாரதி, “சினிமாவுக்கு புதிதாக வந்த காலத்தில், இவ்வளவு பெரிய ரசிகர் ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பும் பாசமும் ஒவ்வொரு நாளும் என்னை உற்சாகப்படுத்துகிறது. அவர்கள்தான் என் மிகப்பெரிய பலம்,” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “என் ரசிகர்களின் அன்பை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதே என் லட்சியம். மற்ற கதாநாயகிகளைப் போல நானும் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறேன். என் ரசிகர்களுக்காக தொடர்ந்து அவர்களை மகிழ்விக்கும் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவேன். தரமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதன் மூலம் அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கும் நம்பிக்கைக்கும் நியாயம் செய்வேன்,” என்று திவ்யபாரதி கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading