‘ராக்கா’ படத்தில் மேலும் ஒரு நடிகை.. அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் இணைந்த நைலா கிரேவால்!

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘ராக்கா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அறிவியல் புனைகதை பின்னணியில் உருவாகி வரும் இந்த ஆக்‌ஷன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகை தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஐந்து கதாநாயகிகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகைகளின் பெயர்கள் பேசப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் மலையாள நடிகை பெமினா ஜார்ஜ் இப்படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில், மேலும் ஒரு நடிகை ‘ராக்கா’ படத்தில் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது. ரன்பீர் கபூர் நடித்த ‘தமாஷா’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை நைலா கிரேவால், தொடர்ந்து ‘பரேலி கி பர்பி’, ‘தப்பட்’, ‘இஷ்க் விஷ்க் ரீபவுண்ட்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், நெட்பிளிக்ஸ் தொடர்களிலும் நடித்து கவனம் பெற்றுள்ளார்.

சமீபத்திய நேர்காணலில் பேசிய நைலா கிரேவால், “நான் அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. தற்போது அந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுவரை பாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே நடித்த எனக்கு, தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வருவதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading