71 வயதான உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான், தான் மறைந்த பிறகே வெளியிடப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ‘Farewell’ பாடலை ரகசியமாக பதிவு செய்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சமீப ஆண்டுகளில் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகினரின் மறைவு வாழ்க்கை, முதுமை மற்றும் மரணம் குறித்து ஆழமாக சிந்திக்க வைத்ததாலேயே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், தனது இறுதிச் சடங்கின்போது இந்த பாடல் கண்டிப்பாக ஒலிக்க வேண்டும் என்றும், அதுவே உலகிற்கான தனது இறுதி செய்தியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Add a Comment
