மத்திய அரசு பைரசி விஷயத்தில் டெலிகிராமிற்கு செக் வைத்துள்ளது. சினிமா மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்யும் டெலிகிராம் சேனல்களை முடக்க வேண்டும் என டெலிகிராம் நிறுவனத்திற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபற்றி 15 நாட்களுக்குள் எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை சமர்பிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஓடிடி தளங்களின் உரிமையாளர்கள் தங்களின் படைப்புகள் டெலிகிராம் தளத்தில் திருட்டுத்தனமாக பகிரப்படுவதாக அளித்த தொடர் புகாரின் அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Add a Comment
