கவுரி ஸ்ப்ராட்-ஐ கரம் பிடித்த அமீர்கான் !

பாலிவுட்டில் பிரபலமான முன்னணி நடிகர் அமீர்கான், 61. இவருக்கு ஏற்கனவே இரு திருமணங்கள் நடந்து விவாகரத்து ஆன நிலையில் கவுரி ஸ்ப்ராட், (47 வயது) என்ற பெண்ணை காதலித்து வந்தார். சில நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அமீர்கான் – கவுரியின் திருமணம் ஜூலை 5ல் நடப்பதாக அமீர்கானே முன்னரே அறிவித்திருந்தார். அதன்படி, மும்பை பாந்த்ராவில் உள்ள அமீர்கானின் வீட்டில் இன்று மதியம் 12:45 மணியளவில் திருமணம் நடந்தது. இருவரும் தங்களின் திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டனர். இதில் மணமக்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading