மலையாள நடிகையான அபர்ணா தாஸ், பகத் பாசில் நடித்த ஞான் பிரகாஷன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இயக்குநர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து கவினுடன் இணைந்து நடித்த டாடா திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அந்த வெற்றிக்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த அபர்ணா தாஸ், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது லவ் பேய்ட் திரைப்படத்தில் நடித்து வரும் அவர், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது திரைப்பயணம் குறித்து பேசியுள்ளார்.
அப்போது, டாடா திரைப்படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததாகவும், அதுபோன்ற தரமான தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், “தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்துள்ளேன். அவர் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றும் கூறியுள்ளார்.
