தமிழில் விரைவில் அறிமுகமாகும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஜான்வி கபூர்?

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியரின் மூத்த மகளான ஜான்வி கபூர், இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருவதுடன், தற்போது தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக ஜான்வி கபூரை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்த பல இயக்குநர்களும் முன்னணி நடிகர்களும் முயற்சி மேற்கொண்ட நிலையில், தற்போது அந்த வாய்ப்பு இயக்குநர் சற்குணத்திற்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சற்குணம் விரைவில் இயக்கவுள்ள புதிய வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஜான்வி கபூர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வெப் தொடருக்கு ‘குரத்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading