முதல்வர் விஜய்க்கு திரைத்துறை சார்பில் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்த திட்டமா?

தமிழகத்தின் புதிய முதல்வராக சினிமா துறையைச் சேர்ந்த விஜய் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக திரைப்படத் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, திரைப்பட உலகைச் சார்ந்த பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் ஆகியோரின் மறைவு தொடர்பான இரங்கல் நிகழ்வுகளில் மட்டும் அவர் பங்கேற்றிருந்தார். இதுவரை வேறு எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், தமிழக முதல்வர் விஜய்க்கு திரைப்படத் துறையின் சார்பில் பிரம்மாண்டமான பாராட்டு விழா ஒன்றை நடத்துவதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம், பெப்சி உள்ளிட்ட முக்கிய திரைப்பட அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த விழாவை நடத்த முடிவு செய்துள்ளன. முதற்கட்டமாக, இதற்கான அனுமதியைப் பெற முதல்வரை நேரில் சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரைப்படத் துறையுடன் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிற தென்னிந்திய திரையுலகினரையும் இந்த பாராட்டு விழாவில் பங்கேற்க அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முதல்வர் விஜய்யுடன் பல்வேறு மொழித் திரைப்படங்களில் பணியாற்றிய கலைஞர்களையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து, கலைநிகழ்ச்சிகளுடன் மிகப்பெரிய அளவில் இந்த விழாவை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading