உருவாகிறது ‘மா இண்டி பங்காரம்’ -2… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

தெலுங்கு திரையுலகில் நடிகை சமந்தா நடிப்பில், சிறிய இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மா இன்ட்டி பங்காரம்’. இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த திரைப்படம், கதாநாயகியை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தை சமந்தாவுடன் இணைந்து அவரது கணவரான ராஜ் நிடிமொரு தயாரித்திருந்தார்.

1980களின் பின்னணியில் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களையும், அவரது உணர்வுகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, உலகளவில் சுமார் ரூ.60 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘மா இன்ட்டி பங்காரம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக, சமீபத்தில் நடைபெற்ற படத்தின் வெற்றி விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் ராஜ் நிடிமொரு பேசுகையில், “முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இரு மடங்கு அதிகமான விறுவிறுப்பையும், மகிழ்ச்சியையும் ரசிகர்களுக்கு வழங்கும். அதற்கான கதைக்கரு ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. முதல் பாகத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்பக் குழுவினரே இந்த இரண்டாம் பாகத்திலும் இணைந்து பணியாற்ற உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading