‘SURIYA 47’ திரைப்படம் எப்படி இருக்கும்? முக்கியமான அப்டேட்-ஐ கொடுத்த இயக்குனர் ஜீத்து மாதவன்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ள சூர்யா, தற்போது இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கும் தனது 47வது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த படம் குறித்து இயக்குநர் ஜீத்து மாதவன் கூறுகையில், “சிங்கம் திரைப்படத்திற்குப் பிறகு, இந்த படத்தில் சூர்யா மீண்டும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தக் கதையின் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. சூர்யாவை மனதில் வைத்து மிகவும் நேர்த்தியாக இந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். இது நிச்சயமாக சூர்யாவுக்கு மேலும் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடர்பான இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சூர்யாவின் 47வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். மேலும், நஸ்லன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading