ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் ‘கட்டா குஸ்தி-2 படத்தின் டிரெய்லர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் நடிப்பில், கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. செல்லா அய்யாவு இயக்கிய இந்தப் படத்தில், ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடித்திருந்தார். இதற்கு முன்பும் விஷ்ணு விஷாலை வைத்து ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தை இயக்கியிருந்த செல்லா அய்யாவு, இந்த படத்திலும் நகைச்சுவை கலந்த குடும்பக் கதையை சுவாரஸ்யமாக வழங்கியிருந்தார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்த இப்படம் சுமார் ரூ.5 கோடி செலவில் உருவாகி, ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் செல்லா அய்யாவும், நடிகர் விஷ்ணு விஷாலும் மீண்டும் இணைந்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப் படத்தை விஷ்ணு விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்துள்ளார். முதல் பாகத்தைப் போலவே, இந்தப் படத்திலும் ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

அதைத் தொடர்ந்து வெளியான ‘கட்டா குஸ்தி 2’ டீசரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லக்ஷ்மி தம்பதியருக்கு ஆறு வயது மகள் இருப்பதையும், அவர்களின் குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டே கதை நகர்வதையும் வெளிப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில், தற்போது படக்குழு இப்படத்தின் டிரெய்லரையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வருகிற ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading