ரவி மோகன் நடித்துள்ள ‘கராத்தே பாபு’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய ‘பராசக்தி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் ரவி மோகன் தற்போது ‘கராத்தே பாபு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கணேஷ் கே. பாபு இயக்கியுள்ள இந்த திரைப்படம் அரசியல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், ‘கராத்தே பாபு’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரவி மோகனுக்கு ஜோடியாக தாவ்தி ஜிவால் நடித்துள்ள இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், நாசர், விடிவி கணேஷ், சக்தி வாசு, சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரசியல்வாதிகளை மையமாகக் கொண்ட பல திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், ஒரு எம்.எல்.ஏ-வின் மறுபக்கத்தை, அதாவது அவரது தனிப்பட்ட வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் மனவலிகளை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதைக்களத்துடன் இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading