‘லெனின்’ திரைப்படத்தில் என் கதாபாத்திரம் நிச்சயமாக உங்களை கவரும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் !

‘தாய் கிழவி’ திரைப்படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துவருகிறார். இவர் ஏற்கனவே துல்கர் சல்மான் நடித்த ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

இந்நிலையில், பாக்யஸ்ரீ போர்ஸ் தெலுங்கில் அக்கில் அக்கினேனிக்கு ஜோடியாக நடித்துள்ள ‘லெனின்’ திரைப்படம் வருகிற ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து பேசிய பாக்யஸ்ரீ போர்ஸ், “இந்த திரைப்படத்தில் நான் ‘பாரதி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட இந்தக் கதாபாத்திரம் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. ரசிகர்களின் இதயத்தில் ‘பாரதி’ என்ற இந்தக் கதாபாத்திரம் நீங்காத இடத்தைப் பெறும் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். இவ்வளவு வலிமையான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் முரளி கிஷோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜூலை 10-ஆம் தேதி முதல் ‘பாரதி’ ஒவ்வொருவரின் இதயத்திலும் வாழ்வார் என்பதில் எனக்கு 100 சதவீத நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading