கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ரஜினிகாந்தின் 173வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் திரைப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்ட நிலையில், இன்று படப்பிடிப்பு தொடங்கியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கமல்ஹாசனுடன் இணைந்து ஆர். மகேந்திரனும் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார். தமிழ் திரையுலகின் இரண்டு முக்கிய நடிகர்கள் இணையும் இந்த திரைப்படத்தை ‘டிராகன்’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார்.
அனிருத் ரவிச்சந்தர் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். படம் தொடர்பான மற்ற தகவல்கள் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
