பவன் கல்யாணின் ஓஜி-2… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

இயக்குநர் சுஜித் இயக்கத்தில் ‘ஓஜி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் – இயக்குநர் சுஜித் கூட்டணியில் உருவான ‘தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படம் கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக வெளியானது.

அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அவை உருவாக்கப்பட்ட விதம் உள்ளிட்ட பல அம்சங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமாக அமைந்தது. தமன் இசையமைத்த பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

இந்த நிலையில், இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் ‘ஓஜி – 2’ திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஓஜி யுனிவர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இதன் அறிமுக வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பவன் கல்யாண் போர் பின்னணியில் அமைந்த கதையில் நடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading