மோகன்லால் – மீரா ஜாஸ்மின் நடிக்கும் ‘அதி மனோகரம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் தருண் மூர்த்தி இயக்கத்தில் வெளியான ‘தொடரும்’ திரைப்படம் ரூ.230 கோடி வசூல் செய்து வெற்றி பெற்றது. அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து ‘அதி மனோகரம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் தருண் மூர்த்தி.

இந்த திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லால் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக, அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.

சபரிமலையில் காவல் பணியில் இருக்கும் டி.எஸ்.பி. லவ் லாஜன் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சீரான கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வரும் டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading